+91 7305 533 533
contact@dexteracademy.in

Current Affairs

Dexter Academy
11 Feb 2019

நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 06 2019

//
Comments0

முக்கியமான நாட்கள்

பிப்ரவரி 06 – சர்வதேச பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்கான ஜீரோசகிப்புத்தன்மை தினம்

 • ஐக்கிய நாடுகள் சபையினால் பெண்களின் பிறப்புறுப்புச் சிதைவை அகற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக சர்வதேச பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்கான ஜீரோ சகிப்புத்தன்மை தினம் பிப்ரவரி 6ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது 2003ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 

தேசிய செய்திகள்

ஹிமாச்சல பிரதேசம்

மருத்துவ உயர் கல்வி திட்டத்தில் திருத்தம்

 • ஹிமாச்சல பிரதேச அரசு மருத்துவ உயர் கல்விக்கான பத்திர தொகை பெறும் உயர்கல்வித் திட்டத்தை திருத்தியமைக்க முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிரா

பழங்குடி மக்களுக்கான நலத்திட்டங்களை ஆய்வு செய்ய குழு

 • மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் பழங்குடி மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளது.

ஒடிசா

நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல்  நாட்ட உள்ளார் நிதின்கட்காரி

 • ஒடிசாவில் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 3 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி அடிக்கல் நாட்ட உள்ளார். 

சர்வதேச செய்திகள்

தலிபான் புதிய ஆப்கானிய அரசியலமைப்பை கோருகிறது

ஆப்கானிஸ்தானில் ஒரு புதிய அரசியலமைப்பை தலிபான் கோரினர். ரஷ்யாவில் மூத்த ஆப்கானிய அரசியல்வாதிகளுடன் ஒரு அரிய சந்திப்பில் போரால் பாதித்த நாட்டை ஆளுவதற்கு ஒரு “உள்ளடக்கிய இஸ்லாமிய அமைப்பு” வேண்டும் என்று உறுதியளித்தார்.

அறிவியல் செய்திகள்

ஜிசாட்-31 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

 • இந்தியாவின் புதிய தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-31 ஃபிரெஞ்ச் கயானாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஏரியான் 5 விஏ-247 செலுத்து வாகனம் இந்தியாவின் ஜிசாட்-31 மற்றும் சவுதி நாட்டின் புவி நிலை செயற்கைக்கோள் 1-ஹெல்லாஸ் சாட் 4 செயற்கைக்கோள்களுடன் ஏவப்பட்டது. ஜிசாட்-31 இந்தியாவின் 40வது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும்.

மாநாடுகள்

43 வது சர்வதேச புத்தக கண்காட்சி

 • கொல்கத்தாவில் 43 வது சர்வதேச புத்தக கண்காட்சியில், இந்தியாவின் தேசிய டிஜிட்டல் நூலகம் இலவசமாக புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய அனுபதிப்பதால் அதிக மக்களை ஈர்த்துள்ளது.

 • இந்தியாவின் தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்டது மற்றும் ஐஐடி கரக்பூரால் உருவாக்கப்பட்டது.

பரமனு டெக் 2019′

 • வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, பணியாளர்கள், பொது குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியங்கள், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறைக்கான மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், வெளிவிவகார அமைச்சகம் மற்றும் அணுசக்தித் துறை (DAE) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பரமனு டெக் 2019’ மாநாட்டில் பிரதான உரையை ஆற்றினார். மாநாட்டில் அணுசக்தி மற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்பங்கள் தொடர்பான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் மத்திய அமைச்சரவைஒப்புதல்

அனைத்து விவசாய குடும்ப கணக்கெடுப்பு நடத்த அரசு நடவடிக்கை

 • 2018 ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூன் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் அனைத்து விவசாய குடும்பங்களிடமும் ஒரு கணக்கெடுப்பு நடத்த அரசு முடிவு செய்துள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் இந்த கணக்கெடுப்பை நடத்த உள்ளது.

 • இது அவர்களின் வருமானம், செலவினம் மற்றும் கடனில் கவனம் செலுத்துகிறது.

விருதுகள்

சங்கீத நாடக அகாடமி விருதுகள் (Sangeet Natak Academy awards)

 • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2017 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க சங்கீத நாடக அகாடமி விருதுகளை இராஷ்டிரபதி பவனில் வழங்கினார்.

 • இசை, நடனம், நாடகம், பாரம்பரியம், நாட்டுப்புற மற்றும் பழங்குடி இசை உட்பட 42 துறைகளைச் சார்ந்த நாற்பத்தி இரண்டு கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.

மொபைல் செயலிகள் இணைய போர்ட்டல்

தர்வாசா பேண்ட்பாகம் 2′ பிரச்சாரம்

 • நாட்டிலுள்ள கிராமங்களின் திறந்தவெளி கழிவுகள் இல்லாத நிலையை நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்தும் ‘தர்வாசா பேண்ட்பாகம் 2’ பிரச்சாரத்தை ஸ்வச்ச பாரத் மிஷன் கிராமீன் அறிமுகப்படுத்தியது. குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் தயாரித்த இந்த பிரச்சாரம் மும்பையில் தொடங்கப்பட்டது. 

விளையாட்டு செய்திகள்

இந்தியா Vs நியூசிலாந்து டி20 தொடர்

 • முதல் டி20 போட்டியில் இந்தியா 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.

இந்தியா Vs நியூசிலாந்து பெண்கள் டி20 தொடர்

 • பெண்களுக்கான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

Leave a Reply