+91 7305 533 533
contact@dexteracademy.in

Dexter Academy

Blog
31 Dec 2018

பாதையில் பாராங்கல்

/
Posted By
/
Comments0

கல் எல்லாம் மாணிக்க கல்லாகுமோ…” என்ற பாடல் அந்த பாதை ஓரத்தில் உள்ள” முருகன் தேநீர் கடையில் உள்ள ரேடியோவில் போய் கொண்டிருந்தது. பாடலை தேநீரோடு சேர்ந்து இரசித்தபடி கடைக்கு முன் இருந்த மர வாங்கில் அமர்ந்த பேசிக் கொண்டிருந்தனர் இருவர்.

அண்ணை சின்னராசு நான் உந்த பாடலுக்காக ஆலயமணி படத்தை ஆறு தடவை பார்த்திருப்பன். எல்லா பாடல்களும் அந்த படத்தில் மாணிக்கங்கள தான்”

தம்பி முருகேசு பாடலில் வந்த மாணிக்க கல் இருக்கட்டும் உந்த பாதை நடுவில் கவனிப்பார் அற்று கிடக்கும் பாராங்கல்லைப் பார்த்தாயா.? உந்தப் பெரிய பாராங்கல் கன காலமாக உந்த இடத்தில அசையாமல் கிடக்குது , இடைஞ்சல் இல்லாமல் ஆக்ள் பாதையில் போய் வர உதை ஓரமாகத் தள்ளி வைக்க வேண்டும் என்று ஒருத்தரும் யோசிக்க வில்லை பார்த்தியே”?

அது இவ்வளவு காலமும் இருந்துத போல் இருந்திட்டு போகட்டுமே அதுக்கேன் நீ அண்ணை கவலைப் படுகிறாய்”?

நீ சொல்லுற கதை நல்லாய் இருக்கு; உந்த பாராங் கல்லின் வரலாறு தெரியுமே உனக்கு”? .

நீ சொன்னால் தானே தெரியும் எனக்கு”

இந்த பாதை வரமுன் இருந்தே உந்த பாரங்கல் உந்த இடத்தில இருக்கு அது தெரியுமே உனக்கு”?

அதுக்கென்ன இப்ப “?

இப்ப முதலிலை கதையை சொல்லி முடிக்க விடு. எங்கட தமிழ் தேசியத் தலைவர் சிங்களவனுக்கு எதிராக போருக்கு ஆயித்தமாக இருந்த பெடியன்களுக்கு உந்த கல்லில் இருந்து தான் அவர்களை ஊக்குவிக்க உணர்ச்சி உள்ள உரையாற்றினவர் அந்த போரில் பெடியன்கள் வெண்டவங்கள் . அதாலை உது அதிர்ஷ்டம் உள்ள பாராங்கல் என்று ஊர் சனம் பேசினம்” சின்ன்ராசு சொன்னார் .

அப்படியா விஷயம் அண்ணை. போர் நடக்கைக்கை அப்ப நான் துபாயிலை வேலை. நல்ல காலம் உந்த கதை இப்ப ஆர்மிக்காரன் காதில் விழுந்தால் கல்லுக்கு குண்டு வைத்து சுக்கு நூராக உடைத்துப் போடுவான். வல்வட்டிதுறையில் தலைவர் பிறந்த வீட்டை உடைத்து தரை மட்டமாக்கிய அவங்களுக்கு இந்த பாராங்கல் ஒரு கால் தூசு” முருகேசு சொன்னான்

ஓரு காலத்திலை போர்துக்கீசுக்காரன் யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலை இடித்து அந்த கோவில் கட்டிடன கல்லுகளைக் கொண்டு யாழ்ப்பாணம் கோட்டையை கடினவங்கள் “ இது சின்னராசு சொன்ன வரலாறு

அது சரி சின்னரராசு அண்ணை இந்த பெரிய பாராங்கல் என்ன நிறை இருக்கும் எண்டு நினைக்கிறாய்’?

முருகேசு. ஒரு தடவை கல்லை தூக்கி பார்த்து விட்டு உனக்கு சொல்லுறன் கல்லை பார்க்கும் உது எங்கடை தடியன் குண்டுமணி போல் இருக்கிற படியால் உந்த கல் அவன் நிறை இருக்கலாம் எண்டு நினைக்கிறேன்”

குண்டுமணியின் நிறை தெரியுமே அண்ணை உனக்கு”?

ஒருக்கா அவன் எனக்கு சொன்னவன் தன் நிறை 400 கிலோ என்று” சின்னராசு சொன்னார்

உந்த பாராங்கல் இருந்த இடத்தில இருக்கட்டுமே. அதலை யாருக்கும் தொந்தரவு இல்லைதானே “

உதுக்குஅடியில் பாம்பு இருந்தாலும் இருக்கும் .

கல்லை அசைத்தால் கொத்தி போடுமாம், ஊர் சனம் சொல்லுது” முருகேசுவின் விளக்கம் .

உந்த விசர் கதை வேண்டாம் . உந்தக் கல் உதிலை இருக்கிறது ஆபத்து. எங்கடை பலசரக்கு கடை மணியத்தாரின் மகன் ராஜேஷ்,, தகப்பன் வாங்கி கொடுத்த புது ரலி சைக்கிலில் உந்த ரோட்டிலை வரக்கை யாரோ ஒரு பெடிச்சி போவதைப் பிராக்கு ( கவனம் இல்லாமல் ) பார்த்து உந்தக் கல்லில் சைக்கில் மோதி பெடியனுக்கும் சைக்கிளுக்கும் பெருத்த காயம் . அப்படி கவனமில்லாமல் பாதையில் நடப்போருக்கு கல்லினால் ஆபத்து வரலாம் “

உது நடந்தும், கல்லை பாதயில் இருந்து ஓரத்தில் தள்ளி வைக்காமல் சனம் என்ன செய்யுது? . இன்ன கொஞ்சம் காலம் போனால் ஊர் சனம் கல்லுக்கு பூ வைத்து, குங்குமம , சந்தனம் , திருநீறு பூசி பாதை பிள்ளையார் என்று பொங்கி கும்பிடத் தொடங்கிடும்”

உதுக்கு நான் ஓரு யோசனை சொல்லட்டே “

சொல்லு முடிந்தால் செய்வோம்”

எங்கட கிராம் சபைக்கு ஒரு பெட்டிசன் போடுவோம் . இந்த பாராங்கல் பாதை நடுவில் இருப்பது ஆபத்து . அதைப் பாதை ஓரமாக தள்ளி வைக்க கெதியிலை நடவடிக்கை எடுக்கும் படி”.

செயல் முறைப்படி அவர்கள் பெடிசனுக்கு நடவடிக்கை எடுக்க கன காலம் எடுக்கும். சில நேரம் உதை செய்ய செலவுக்கு கிராமசபையில் காசு இல்லை என்பினம்”

அப்ப கல்லை ஓரமாக அகற்ற என்ன வழி”

இருக்கவே இருக்கு. இந்த கிரமத்து பெரியாரின் சமூக சீர்திருத் வாலிபர்கள் சங்கம் . அவர்களின் கவனத்துக்கு கொண்டு வருவோம். பிறகு நடப்பதை பார்ப்போம் ”

அப்படிச் செய் அண்ணை”

***

நாட்கள் சில சென்றன . ஒரு நாள் நல்லிரவு சங்கத்தை சேர்ந்த சுமார் பத்து வாலிபர்கள் ஓன்று கூடி பாராங் கல்லை இருந்த இடத்தில் இருந்து தூக்கி பாதை ஓரமாக வைத்தார்கள். அடுத்த நாள் காலை பெரிய பாராங்கல் அசைந்த அதிசயத்தைப் பார்க்க ஒரே கூட்டம். ஊர் பத்திரிகை நிருபர் கமராவோடு கூட்டத்தில் நின்றார் . முருகன் தேநீர் கடைக்கு அன்று பாராங்கல்லின் புண்ணியத்தில் நல்ல வியாபாரம்

(யாவும் புனைவு)

Leave a Reply